tamil

Sorting: Latest | Popular | Pending
➰➰➰➰➰➰➰➰➰➰

🤔    *நாளும் ஒரு சிந்தனை*

கேள்வி என்னவென்று
தெரியாது...
ஆனால், 
பதில் எழுத வேண்டும்.
இதுதான் வாழ்க்கை!!

🏚️   *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

     அதிக உடல் எடை கொண்டவர்கள், தொடர்ந்து கரும்புச்சாறு குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் எடை குறையும்.

📰  *நாளும் ஒரு செய்தி*

     அமெரிக்காவிலுள்ள நியுயார்க் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக *'கேத்தலின் ஹோக்கல்'* என்பவர் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 62.

🥘   *நாளும் ஒரு சமையல் குறிப்பு

     தோசை மாவு அரைத்த 2 மணி நேரத்தில் புளிக்கச் செய்வதற்கு சிறிது மிளகாய் வற்றல் காம்புகளை போட்டு வைத்தால் விரைவில் மாவு புளித்து விடும். தோசையும் சுவையாக இருக்கும்.

💰   *நாளும் ஒரு பொன்மொழி*

     அன்பு எல்லைகளுக்கு உட்பட்டது அல்ல.
                 *-பெர்னாட்ஷா*

📆   *இன்று அக்டோபர் 30-*
   
   ▪️ *உலக சிந்தனை நாள்.*

   ▪️ *1502-இல் 'வாஸ்கோடகாமா' இரண்டாவது முறையாக கோழிக்கோடு வந்தார்.*

   ▪️ *1945-இல் இந்தியா ஐ.நா-வில் இணைந்தது.*

            🌸 *பிறந்த நாள்* 🌸

⭕1908- *முத்துராமலிங்க தேவர்* (விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்)

         💐 *நினைவு நாள்* 💐

⭕1883- *தயானந்த சரசுவதி* (இந்திய மெய்யியலாளர்)

⭕1963- *முத்துராமலிங்க தேவர்* (விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்)

➰➰➰➰➰➰➰➰➰➰
( *பகிர்வு)*
ரன்னிங் ரேஸ்ல இப்படிச் சின்ன ஸ்டெப் போட்டு ஓடினா எப்படி ஜெயிக்க முடியும்? எங்கப்பாதான் அகலக்கால் வைக்காதேன்னு சொன்னார்.
முயன்று வரலாற்றைப் படிக்க வேண்டும் இயன்றால் வரலாற்றைப் படைக்க வேண்டும் முடிந்தால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும்.
மனிதன் மனிதனாக வாழ 
சிங்கத்தைப் போன்ற நடை, 
புலியைப் போன்ற வீரம், 
நரியைப் போன்ற தந்திரம், 
நாயைப் போன்று நன்றி செலுத்தும் குணம்,
 யானையைப் போன்ற பலம், 
காகத்தைப் போன்று பகிர்ந்துண்ணும் பாங்கு. 
மாடு போன்ற உழைப்பு, 
குதிரையைப் போன்ற வேகம், 
எருமையைப் போன்ற பொறுமை, 
கழுதையைப் போன்று பொறுப்புகளைச் சுமக்கும் போக்கு,
எறும்பைப் போன்ற சுறுசுறுப்பு மிகவும் அவசியம்.
ரோஜாவை காப்பாற்ற முடியவில்லை. செடியில் கூடவே இருக்கும் அந்த முள்ளினால்,ஒரு நாள் ஆயுள் கொண்ட பூவை கொண்டு தனக்கு நூறு ஆண்டு ஆயுள் வேண்டி பூஜை செய்கிறான் மனிதன்.
பாதையோர மரங்களுக்கு நடுக்கம் வாகனங்கள் மோதி விடுமோ என்று.
ஹேண்ட் வாஷ்னா கை கழுவறது, பேஸ் வாஷ்னா முகம் கழுவறது, அப்போ பிரைன் வாஷ்னா மூளை கழுவறதுன்னு அர்த்தமா?

கஷ்டங்கள் தான் நம் வாழ்க்கைக்கு கற்று கொடுத்த பாடம்! !

கஷ்டங்களை கடந்து தான் வாழ்க்கை பாதையே!!


கதிர் 9171765870

காய்ந்த கண்ணீர்

சத்தம் காதில் எதிரே
என்னவாய் இருக்கும் எட்டி பார்க்கும் தருணம்
கூபீர் நெஞ்சம் படபடத்தது
ஒரு பெண்ணின் அழுகை அலையாய்
ஏன் எதுக்கு என்று என் மனம் குமுறியது
என் கண்கள் அவளையே நோக்கியது
மனம் அவளிடம் செல்ல துடித்தது
எதையும் யோசிக்காமலே என் கால்கள் அவளை நோக்கி நடந்தன
மனதில் எழுந்த கேள்வி அவளிடம் என் இதழ் பகிர செய்தன
கண்ணில் கண்ணீர் தாரையாய் அவள் முகத்தின் அழகை சரித்தது
என் இதழோ அவளிடம் கேள்வி எழுப்ப அவள் கண்கள் என்னை நோக்கியது
அவள் இதழ் என்னிடம் பேச துடிப்பதை கண்டேன்
மறுகணமே
அவள் இதழ் என் கேள்வியின் நிறையை நிரப்பியது
சோக கடலில் மூழ்கிருக்கும் அவளின் கதை என் மனதை வருடியது
அடுத்து என்ன செய்வது
புலம்பும் அக்கணமே ஒரு வெளிச்சம் என் கண்ணில் படர்ந்தது
திடீர் எழுந்தேன்
ஆ...என்ன இது ...கட்டில்லா
எங்கே அந்த பெண்
என் விழி அவளை தேட ஆரம்பித்தன
அப்போதுதான் உணர்ந்தேன் அது நிஜம் இல்லை கனவு என்று
என் கண்களை தழுவினேன்
காய்ந்த கண்ணீர் என் கண் வழியில் ...

கைவண்ணம்,
குகனேஸ்வரன் ஷண்முகம்

0 0 1 0 0 0 0
Like Like Like Like Like Like Like

டேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க! !.

நன்றி அண்ணா "

90 கிட்ஸ்க்கு வந்த சோதனையை பாரு