காய்ந்த கண்ணீர்

சத்தம் காதில் எதிரே
என்னவாய் இருக்கும் எட்டி பார்க்கும் தருணம்
கூபீர் நெஞ்சம் படபடத்தது
ஒரு பெண்ணின் அழுகை அலையாய்
ஏன் எதுக்கு என்று என் மனம் குமுறியது
என் கண்கள் அவளையே நோக்கியது
மனம் அவளிடம் செல்ல துடித்தது
எதையும் யோசிக்காமலே என் கால்கள் அவளை நோக்கி நடந்தன
மனதில் எழுந்த கேள்வி அவளிடம் என் இதழ் பகிர செய்தன
கண்ணில் கண்ணீர் தாரையாய் அவள் முகத்தின் அழகை சரித்தது
என் இதழோ அவளிடம் கேள்வி எழுப்ப அவள் கண்கள் என்னை நோக்கியது
அவள் இதழ் என்னிடம் பேச துடிப்பதை கண்டேன்
மறுகணமே
அவள் இதழ் என் கேள்வியின் நிறையை நிரப்பியது
சோக கடலில் மூழ்கிருக்கும் அவளின் கதை என் மனதை வருடியது
அடுத்து என்ன செய்வது
புலம்பும் அக்கணமே ஒரு வெளிச்சம் என் கண்ணில் படர்ந்தது
திடீர் எழுந்தேன்
ஆ...என்ன இது ...கட்டில்லா
எங்கே அந்த பெண்
என் விழி அவளை தேட ஆரம்பித்தன
அப்போதுதான் உணர்ந்தேன் அது நிஜம் இல்லை கனவு என்று
என் கண்களை தழுவினேன்
காய்ந்த கண்ணீர் என் கண் வழியில் ...

கைவண்ணம்,
குகனேஸ்வரன் ஷண்முகம்
0 0 1 0 0 0 0
Like Like Like Like Like Like Like